பொள்ளாச்சி அபி - சுயவிவரம்
(Profile)
நடுநிலையாளர்
இயற்பெயர் | : பொள்ளாச்சி அபி |
இடம் | : பொள்ளாச்சி |
பிறந்த தேதி | : 18-Feb-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 6814 |
புள்ளி | : 3039 |
பிறையாய் தெரிவதால்
நிலவில் குறையிருக்காது.!
மனதில் மெய்யில்லாவிடில்
எழுத்தில் சத்தியம் மிளிராது..
கயமை மிக்க மனதில்
கவிதைபிறக்காது..!
காலத்தை கிரகிக்காமல்
சரித்திரம் பிறக்காது.!
நீ போகும் பாதையில்
பதிந்துகிடக்கும் முட்களை
பரிசுத்தமாக்கிவிட்டுப்போ..
பின்வருபவர்கள் உன்னைத்
தொடர்கிறார்களாவென பார்க்காதே..!
கனியை உண்பவர்கள் குறித்த
கணக்கெதெற்கு.?
உனது பணியாய்
மரத்தைநட்டுவிட்டுப்போ.
உனதுதேவை எங்கோ
ஒரு இடத்தில் இருக்கிறது.!
முடங்கிவிட நீ சாக்கடையல்ல
காட்டாற்றுவெள்ளம்.
இணைந்து வருவதை -நீ
உருட்டிக் கொண்டு போ..
எதிர்ப்பதையும்..சேர்த்து.!
-பொள்ளாச்சி அபி- B+ve
-- sunpollachi@gmail.com
9894602948
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.!
கடந்த இருமாதங்களாக நம் தோழர்கள் அனைவரையும் தளத்தினுள் ஏறக்குறையக் கட்டிவைத்திருந்த ஒரு வெற்றிகரமான தொடராக “காட்சிப்பிழைகள்..” எனும் கஜல் தொடர் அமைந்திருந்தது என்பதில்,உங்களைப் போலவே நானும் மகிழ்ச்சி கொண்டிருந்தேன்.இந்த மகிழ்ச்சியை புத்துணர்வுடன் துவக்கி வைத்த தம்பி ஜின்னா,நன்றிக்குரியவர். உங்கள் அனைவரின் சார்பிலும், காட்சிப்பிழைகளின் வரிசையில் முத்தாய்ப்பாக நீங்கள்தான் எழுத வேண்டும் என்று ஜின்னாவால் எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்கும் சேர்த்து எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.!கடந்த சில நாட்களாக நம்தோழர்கள் அனைவரும் எழுதிய கஜல் கவிதைகளை நான் அவ்வப்போது வாசித்துக் கொண்டுதான் இருந்தேன். கருத்து எதுவும் பதிவு செய்யமுடியவில்லை. காரணம்..பிறகு சொல்கிறேன்.!
அப்புறம்..தோழர்களே..கஜல் கவிதைகளோடான உங்களது ருசிகர அனுபவத்தை எப்போதேனும் இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.! எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே கொஞ்சம் பகிர்ந்து கொள்ளலாமா..?
சரி..கஜலுக்கான இலக்கணத்தைக் கற்றுக் கொள்ளலாம் என்று இணையத்தில் தேடிப்பார்த்ததில் நிறைய நிறைய வரைமுறைகள், வரம்புகள்..என கண்ணைக்கட்டியது. அதுவும் கஜல்கள், அடிப்படையில் உருது மொழியிலிருந்து வந்தது என்பதால் ராபியா என்றும்,ஷேர் என்றும், மத்லா, அப்புறம் மஃதா என்றும் இருந்த வார்த்தைகளை நினைவிலிருத்தவும் சிரமமாக இருந்தது.(இலக்கணத்தில் சிக்கல் இல்லை..வரும் பிப்ரவரி.18.ஆம் தேதியில் 50 வயதை தொட இருக்கிறேன்.ஒருவேளை அதுவும ;காரணமாக இருக்கலாம்) இதனால் கூடவே கவலையும் தொற்றிக் கொண்டது.எல்லாவற்றையும் விட பெரிய கவலை..கஜல் கவிதைகள் பெரும்பாலும் காதலையும்,அதன் பின்னனியில் இயங்கும் ஒரு சொகத்தையும்.. இல்லையில்லை.. ஒரு சோகத்தையும் பாடிக் கொண்டிருப்பதாக இருக்கவேண்டும் என்பது ஒரு விதியாக வேறு மிரட்டிக் கொண்டிருந்தது. அடக்கஷ்டமே..இத்தனை வயசுக்கப்புறம்..காதல் என்ற மூடுக்குப் போய்..அதை அடிப்படையா வெச்சு கவிதை..அதுவும் கஜல் கவிதை எழுதணுமாமே..!..ஊம்..இது நடக்குமா..? என்று எனக்கு சந்தேகமும் வந்துவிட்டது.
உங்களுக்காக காட்சிப் பிழைகள் .52
e>
வரும் ஞாயிறன்று -18 / 12 /2016 - காலை 9 .மணியளவில் -பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில், நமது தோழர்கள் மகிழினி,கட்டாரி சரவணா,கவிஜி மற்றும் பொள்ளாச்சி அபி எழுதிய நூல்கள் அறிமுகம் செய்யப் படவுள்ளன.
வாய்ப்புள்ள தோழர்கள் வரலாமே..!
வரும் ஞாயிறன்று பொள்ளாச்சியில் நமது எழுத்து நண்பர்களின் நூல்கள் அறிமுக விழா. வாய்ப்புள்ள தோழர்கள் வருக..!
வரும் ஞாயிறன்று -18 / 12 /2016 - காலை 9 .மணியளவில் -பொள்ளாச்சி இலக்கிய வட்டம் சார்பில், நமது தோழர்கள் மகிழினி,கட்டாரி சரவணா,கவிஜி மற்றும் பொள்ளாச்சி அபி எழுதிய நூல்கள் அறிமுகம் செய்யப் படவுள்ளன.
வாய்ப்புள்ள தோழர்கள் வரலாமே..!
முறையாக லாகின் செய்த பின் எண்ணம் பகுதியில் படமும், சில வரிகளும் எழுதிப் பதிவு செய்தால் இது உங்கள் எண்ணம் அல்ல என்றே தளம் காட்டுகிறது.பலமுறை முயற்சி செய்தும் பலனில்லை. காரணம் தெரிவிக்க முடியுமா.? அல்லது ஏதேனும் தொழில் நுட்பக் கோளாறா.?
அன்புடன்
பொள்ளாச்சி அபி.
இந்த தளத்தில் எழுதிக் கொண்டிருந்த,தற்போது பல்வேறு முன்னணி இலக்கிய இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கும் அன்புக்குரிய கவிஞர் தோழர்.அகர முதல்வன் அவர்களின் கவிதை தொகுப்பு அறம் வெல்லும் அஞ்சற்க "-நூல் அறிமுகம் பொள்ளாச்சியில் நடை பெறுகிறது.
வாய்ப்புள்ள தோழர்கள் வருக..!
அன்புடன்
பொள்ளாச்சி அபி
இந்த தளத்தில் எழுதிக் கொண்டிருந்த,தற்போது பல்வேறு முன்னணி இலக்கிய இதழ்களில் எழுதிக் கொண்டிருக்கும் அன்புக்குரிய கவிஞர் தோழர்.அகர முதல்வன் அவர்களின் கவிதை தொகுப்பு அறம் வெல்லும் அஞ்சற்க "-நூல் அறிமுகம் பொள்ளாச்சியில் நடை பெறுகிறது.
வாய்ப்புள்ள தோழர்கள் வருக..!
அன்புடன்
பொள்ளாச்சி அபி
“நிறுத்துங்கள்..!” அவரின் கம்பீரக்குரலுக்கு கட்டுப்பட்ட கூட்டம்,அப்படியே உறைந்து நின்றது.கைகளில் இருந்த கற்களும்,குப்பைகளும்,சிறு தடிகளும் அப்படியே உறைந்து நின்றன.
அவர் குரல் கொடுத்த இடத்திலிருந்து.மெதுவாக நடந்து மக்கள் கூட்டத்தை நோக்கி வந்தார்.மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்களைப் போல கூட்டம் இரண்டாகப் பிளந்து அவருக்கு வழிவிட்டது. விலகிய கூட்டத்தின் வழியே நடந்து மையத்திற்கு வந்தவர்,அப்போதுதான் பார்த்தார் அவளை..,கண்ணீர் வழியும் கண்களில் மிரட்சியுடன்,கன்னத்தில் அறைபட்ட சிவப்புடன்,கூட்டத்தின் நடுவே கூனிக்குறுகி அமர்ந்திருந்தாள் அந்த இளம்பெண்.
“யார் இவள்..? எதற்காக அனைவரும் ஒன்றுகூடி அடிக்க
ஆம், பெங்களுரு என் காதலிதான், முதலில் வந்த தினம் பிப்-14 அப்பொழுது காதலர் தினம் கொண்டாடப்படும் வழக்கம் இல்லை, ஆசையாக பிழைப்பிற்காக வந்த ஊர், ஆண்டுகள் பல கடந்தவிட்டது, பலமுறை இங்கிருந்து வேலைக்காக வெளியேற நிர்பந்தம் ஏற்பட்ட பொழுதும் போராடி இங்கிருப்பதையே விரும்பி தக்கவைத்துக்கொண்டேன் ( அந்த அளவிற்கு இந்த பெங்களுருவின் மீது possessive ) ஆனால் எங்களையும் மீறி இந்த ஊரை விட்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம், நிற்க, நான் சொல்ல வந்த விசயமே மொழியை பற்றித்தான் : கடந்த 14 நாட்களாக தொடரி மற்றும் பேருந்து என்று பெரும்பாலும் பயணத்திலேயே இருந்தேன், ( பெங்களுரு -
மீன்கார மாரி
பரிசல்கார காளி
ஒட்டக லோனு வேணுமா.?
*****************
“ஐந்தாண்டுக்கு முன்
ஆற்றில் போயிட்டாள் அம்மா”
“ஆறுனா என்னப்பா..?”
********************
எருமையை
வரைந்து முடித்தேன்
கொம்பால் முட்டுகிறது.
*****************
நிழலைக் கூட
அழிக்க முடியவில்லை
கொதிக்கிறான் சூரியன்
*************************
சுவரெங்கும்
பச்சை இலைகள்
உயிரற்ற சிரிப்பு
***********************
மலை பிளந்தவனுக்கு
விடுதலைக் கிரீடம்
மயங்குது நீதி
*********************
கழுத்தில் கத்தி
முழக்கம் எழவில்லை
தேசத்துரோகி
********************
பல்கலைக் கழகம்
ஒரேயொரு பாடம்
பாரத் மாதாகி ஜே
*
மீன்கார மாரி
பரிசல்கார காளி
ஒட்டக லோனு வேணுமா.?
*****************
“ஐந்தாண்டுக்கு முன்
ஆற்றில் போயிட்டாள் அம்மா”
“ஆறுனா என்னப்பா..?”
********************
எருமையை
வரைந்து முடித்தேன்
கொம்பால் முட்டுகிறது.
*****************
நிழலைக் கூட
அழிக்க முடியவில்லை
கொதிக்கிறான் சூரியன்
*************************
சுவரெங்கும்
பச்சை இலைகள்
உயிரற்ற சிரிப்பு
***********************
மலை பிளந்தவனுக்கு
விடுதலைக் கிரீடம்
மயங்குது நீதி
*********************
கழுத்தில் கத்தி
முழக்கம் எழவில்லை
தேசத்துரோகி
********************
பல்கலைக் கழகம்
ஒரேயொரு பாடம்
பாரத் மாதாகி ஜே
*